Balipeedamae - பலிபீடமே | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Balipeedamae - பலிபீடமே | Jebathotta Jeyageethangal Vol–40


    பலிபீடமே பலிபீடமே-2
    கறைகள் போக்கிடும்
    கண்ணீர்கள் துடைத்திடும்
    கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே

    1.பாவ நிவிர்த்தி செய்ய
    பரிகார பலியான
    பரலோக பலிபீடமே-2
    இரத்தம் சிந்தியதால்
    இலவசமாய் மீட்பு தந்த
    இரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே

    2.மன்னியும் மன்னியும் என்று
    மனதார பரிந்து பேசும்
    மகிமையின் பலிபீடமே-2
    எப்போதும் வந்தடைய
    இரக்கம் சகாயம் பெற
    ஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே

    3.ஈட்டியால் விலாவில்
    எனக்காக குத்தப்பட்ட
    என் நேசர் பலிபீடமே-2
    இரத்தமும் தண்ணீரும்
    புறப்பட்டதே ஜீவ நதியாய்
    எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே

    4.எல்லாம் முடிந்ததென்று
    அனைத்தையும் செய்துமுடித்த
    அதிசய பலிபீடமே-2
    ஒப்படைத்தேன் ஆவியை
    என்று சொல்லி அர்ப்பணித்த
    ஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே


    English


    Balipeedamae - பலிபீடமே | Jebathotta Jeyageethangal Vol–40 Balipeedamae - பலிபீடமே | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.