Paatham Ondre Vendum Song Lyrics - Christking - Lyrics

    Paatham Ondre Vendum Song Lyrics


    பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

    சரணங்கள்

    1. நாதனே, துங்கமெய் – வேதனே, பொங்குநற்
    காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ்செய்ய — பாதம்

    2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
    பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்தஉன் — பாதம்

    3. வீசும் கமழ் கொண்ட – வாசனைத் தைலத்தை
    ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் — பாதம்

    4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
    நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் — பாதம்

    5. நானிலத்தோர் உயர் – வான் நிலத் தேற வல்
    ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் —பாதம்

    6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு – நாதனே, என்றும் உன் — பாதம்


    Paatham Onte Vaenndum – Inthap
    Paaril Enakku Mattethum Vaenndaam – Un

    Saranangal

    1. Naathanae, Thungamey – Vaethanae, Pongunar
    Kaathaludan Thuyya – Thoothar Tholunjayya
    — Paatham

    2. Seerum Puyalinaal – Vaarithi Pongidap
    Paaril Nadanthaarpol – Neermael Nadanthaun
    — Paatham

    3. Veesum Kamal Konnda – Vaasanaith Thailaththai
    Aasaiyudan – Mari – Poosip Pannintha Por
    — Paatham

    4. Pokkidamatta Em Aakkinai Yaavaiyum,
    Neekkidavae Maran – Thookki Nadantha Nar
    — Paatham

    5. Naanilaththor Uyar – Vaan Nilath Thaera Val
    Aanni Thulaiththidath – Thaanae Koduththa Un
    — Paatham

    6. Paatham Atainthavark – Kaatharavaayp Pira
    Saatham Arul Yaesu – Naathanae, Entum Un
    — Paatham

    Paatham Ondre Vendum Song Lyrics Paatham Ondre Vendum Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.