Piranthathu Iniya - பிறந்தது இனிய | Hema John - Christking - Lyrics

    Piranthathu Iniya - பிறந்தது இனிய | Hema John


    பிறந்தது இனிய புது ஆண்டு
    மகிழ்ந்து துதிப்பாடு - (2)
    இயேசுவே ஒளியாய் உடன் வருவார்
    இனி கலங்கிட தேவையில்லை - (2)

    அல்லேலூயா துதிப்பாடு
    அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

    1. சென்ற நாளில் துன்பங்கள் மறைந்தது
    எல்லாம் சந்தோஷம் இனி எல்லாம் சந்தோஷம் - (2)
    இருண்ட நம் வாழ்வை மாற்றின இன்று
    உதித்தவர் வெளிச்சம்
    இன்று உதித்தவர் வெளிச்சம் - (2)
    பயங்கள் இல்லை தோல்வி இல்லை
    கர்த்தர் நம் துருகம் - (2)

    அல்லேலூயா துதிப்பாடு
    அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

    2. வார்த்தையாகி நம்மில் வாழ்பவர்
    என்றும் துணை இருப்பார்
    அவர் என்றும் துணை இருப்பார் - (2)
    பாரம் மாந்தர் கண்ணீர் துடைக்க
    நமக்கு பெலன் தருவார்
    நமக்கு பெலன் தருவார் - (2)
    செட்டைகளின் நிழலில் நம்மை மறைத்து
    என்றும் காத்துக் கொள்வார் - (2)

    அல்லேலூயா துதிப்பாடு
    அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

    3. பள்ளங்கள் நிறையும் மேடுகள் மறையும்
    பரமனின் அருள் பெருகும் நம் பரமனின் அருள் பெருகும் - (2)
    புதிய இவ்வாண்டில் புதுமைகள் பிறக்கும்
    புதுமைகள் தினம் நடக்கும் - (2)
    இயேசுவின் நம்மில் வாழ்வதினால்
    கேட்பதெல்லாம் கிடைக்கும் - (2)

    அல்லேலூயா துதிப்பாடு
    அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)


    English


    Piranthathu Iniya - பிறந்தது இனிய | Hema John Piranthathu Iniya - பிறந்தது இனிய | Hema John Reviewed by Christking on January 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.