Ponnagar Payanam Pogum Song Lyrics - Christking - Lyrics

    Ponnagar Payanam Pogum Song Lyrics


    பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே – மகிமை
    என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே

    உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ – அவர்
    தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை

    லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே – அவர்
    நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே

    வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் – இன்று
    வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ

    மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் – யேசு
    தன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே

    கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் – சென்றோர்
    நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்

    ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு – புதுப்
    பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்

    கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று – சொல்லும்
    உத்தம் வேதத்தின் உண்மை உன்னத மல்லோ


    Ponnakar Payanam Pokum Punnnniyarkalae – Makimai
    Ennaventuraikka Vallor Yaarumillaiyae

    Unnatha Suthanuk Kaethum Oppumai Yunntoo – Avar
    Thannuthiran Thanthu Konnda Thanmai Yarumai

    Laasaruk Kalutha Kannnneer Nammutaiyathae – Avar
    Naesamaarpil Saaynthu Kollum Niththiraiyithae

    Vanthalaiththup Poyennodu Vaippae Nentavar – Intu
    Vanthalaiththup Pokumaenmai Maantharuk Kunntoo

    Mannnninaa Lunndaana Vudal Mannnneeyaayinum – Yaesu
    Thannuru Votae Eluppum Saththiyam Ithae

    Kannnneer Thutaiththemmai Yaattum Karththararukil – Sentor
    Nannnniyae Jeevakani Yunn Tinnal Neenguvaar

    Aattukkuttiyaanavar Singaasanang Kanndu – Puthup
    Paattukkal Paadum Suththar Koottamatainthaar

    Karththaruk Kullae Marippor Paakkiya Rentu – Sollum
    Uththam Vaethaththin Unnmai Unnatha Mallo

    Ponnagar Payanam Pogum Song Lyrics Ponnagar Payanam Pogum Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.