Jerusalem Ooru - எருசலேம் ஊரு | Sujatha Selwyn - Christking - Lyrics

Jerusalem Ooru - எருசலேம் ஊரு | Sujatha Selwyn


எருசலேம் ஊரு
தெருவுல பாரு
சின்னவங்க பெரியவங்க
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆரவார சந்தோஷம்
ஆர்ப்பரிக்கும் ஜனக்கூட்டம்
என்ன சத்தம் அது என்ன சத்தம்

குருத்தோல கையில
ஓசன்னா வாயில
மரக்கிள தரையில
சந்தோஷமோ நெஞ்சில
ஊர்கோல சத்தம் அது ஊர்கோல சத்தம், சத்தம்
இன்ப சத்தம் அது இன்ப சத்தம்

முன்ன கொஞ்சம் பேரு
பின்ன கொஞ்சம் பேரு
நடுவுல கழுத ஒண்ணு
மேல ஒரு ஆளு
யாரோ எவரோ, எந்த ஊரோ பேரோ இவரு
யாரோ யாரோ இவரு யாரோ யாரோ

வாராரு வாராரு இயேசு ராஜா வாராரு
கழுத மேல வாராரு
கடவுள் பேரில் வாராரு
சாந்தமாக வாராரு
சந்தோஷமா வாராரு
காக்கப் போறாரு - நம்ம
மீட்கப் போறாரு

English


Jerusalem Ooru - எருசலேம் ஊரு | Sujatha Selwyn Jerusalem Ooru - எருசலேம் ஊரு | Sujatha Selwyn Reviewed by Christking on March 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.