Kanmalai Neerae - கன்மலை நீரே | Reenukumar - Christking - Lyrics

    Kanmalai Neerae - கன்மலை நீரே | Reenukumar


    என் கன்மலை நீரே
    உம் கண்ணின்மணி
    நானே காத்திடுவீரே
    என்றென்றும் நீரே - 2

    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களை
    செவ்வையாக மாற்றுபவர் நீரே - 2
    ஆடிடுவேன் பாடிடுவேன்
    அல்லேலுயா சொல்லி
    துதித்திடுவேன் - 2
    - என் கன்மலை நீரே

    நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்
    பதில் கொடுப்பீர் - 2
    நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர்
    உந்தன் உள்ளங்கையில் வைத்து
    என்னை பாதுகாப்பீர் - 2
    - ஆடிடுவேன்

    புழுதியிலே இருந்த என்னை
    புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே - 2
    தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
    உந்தன் பேரை தந்து
    உம் பிள்ளையாக்கினீரே - 2
    - ஆடிடுவேன்

    English


    Kanmalai Neerae - கன்மலை நீரே | Reenukumar Kanmalai Neerae - கன்மலை நீரே | Reenukumar Reviewed by Christking on March 28, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.