Onnumillaymayil Ninnumenne - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை - Christking - Lyrics

    Onnumillaymayil Ninnumenne - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை


    (ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு) - 2

    (இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2.

    1. (போன நாட்கள் தந்த வேதனைகள்
    உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2
    (உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
    புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்) - 2.

    தெய்வ அன்பு என்ன உன்னதம்.

    இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

    2. (ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
    உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2
    (தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
    உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே) - 2

    தேவன் தானே என் அடைக்கலம்.

    ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
    எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
    நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
    (இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
    என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
    எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2
    உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.


    English


    Onnumillaymayil Ninnumenne - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை Onnumillaymayil Ninnumenne - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை Reviewed by Christking on April 02, 2021 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.