Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha - Christking - Lyrics

    Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha


    சீர் இயேசு நாதனுக்கு
    ஜெயமங்களம் ஆதி - 2
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்- 2
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு - 2
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - 2

    1 ) ஆதி சரு வேசனுக்கு
    ஈசனுக்கு மங்களம்
    அகிலப் பிரகாசனுக்கு
    நேசனுக்கு மங்களம்
    நீதிபரன் பாலனுக்கு
    நித்திய குணாலனுக்கு - 2
    ஓதும் அனுகூலனுக்கு
    உயர் மனுவேலனுக்கு - 2

    2) மானாபி மானனுக்கு
    வானனுக்கு மங்களம்
    வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
    கானான் நல் தேயனுக்குக்
    கன்னி மரிசேயனுக்கு -2
    கோனார் சகாயனுக்கு
    கூறு பெத்த லேயனுக்கு - 2

    3) பத்து லட்சணத்தனுக்குச்
    சுத்தனுக்கு மங்களம்
    பரம பதத்தனுக்கு
    நித்தனுக்கு மங்களம்
    சத்திய விஸ்தாரனுக்குச்
    சருவாதி காரனுக்கு - 2
    பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு - 2
    சீர் இயேசு நாதனுக்கு
    ஜெயமங்களம் ஆதி - 2
    திரியேக நாதனுக்கு சுபமங்களம் - 2
    சுபமங்களம் - 2

    English


    Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha Seer Yesu Naathanuku - சீர் இயேசு நாதனுக்கு | Beryl Natasha Reviewed by Christking on September 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.