Sirappu | Aayathamaa Vol.7 Song 9 | Ravi Bharath - Christking - Lyrics

    Sirappu | Aayathamaa Vol.7 Song 9 | Ravi Bharath


    வணக்கம் சொல்கிறேன்
    வந்தனம் செய்கிறேன்
    நீர் செய்த செயல்கள் எல்லாம்
    சிறப்பு என்கிறேன்-2

    சிறப்பு சொல்லும் சிறப்பு
    சிறப்பு செயலும் சிறப்பு-2

    1.வார்த்தையினாலே வானம் பூமி
    வந்ததும் சிறப்பு
    உம் சுவாசத்தினாலே செங்கடல்
    இரண்டாய் சென்றதும் சிறப்பு
    கட்டளையிட்டதும் காற்றும் மழையும்
    கேட்குதே சிறப்பு-2
    கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும்
    அதுதான் சிறப்பு-சிறப்பு

    2.தூரத்தில் இருந்த மானிடரை
    நீர் கண்டதும் சிறப்பு
    அந்தகாரத்தில் இருந்த எங்களை
    அன்பால் வென்றதும் சிறப்பு
    உத்தம ஆவியை முத்திரையாக
    தந்ததே சிறப்பு-2
    சத்திய வேதம் துணையாய் எம்முடன்
    வந்ததே சிறப்பு-சிறப்பு

    3.சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர்
    என்பதும் சிறப்பு
    எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர்
    என்பதும் சிறப்பு
    நித்திய நித்தியமாய்
    உம்மோடு வாழ்வதே சிறப்பு-2
    இத்தனையும் உம் திட்டம் தானே
    அதுதான் சிறப்பு-சிறப்பு

    English


    Sirappu | Aayathamaa Vol.7 Song 9 | Ravi Bharath Sirappu | Aayathamaa Vol.7 Song 9 | Ravi Bharath Reviewed by Christking on November 21, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.