Un Arugile Nirpavar - உன் அருகிலே நிற்பவர் | Pas. Jayasekar - Christking - Lyrics

Un Arugile Nirpavar - உன் அருகிலே நிற்பவர் | Pas. Jayasekar


என் மனமே என்மனமே என்மனமே
ஏன் அழுகிறாய் ஏன் திகைக்கிறாய் என் மனமே
உன் விழிகளை மூடிடு
அதில் விடை உண்டு தேடிடு
உன்னை படைத்தவர்
உயிர் கொடுத்தவர்
உன் அருகிலே தினம் நிற்பவர்
இரவெல்லாம் உன்னை சுமப்பவர் உண்டே
மனமே மனமே..

அவரை விட பட்டாயோ அவமானப்பட்டாரே
அவரை விட உடைந்தாயோ
துரோகத்தால் சிதைந்தாரே
உன்னை உருவாக்கிட உருமாறினார்
தனி ஒருவனாய் தலை தொங்கினார்
மறக்காதே நீ மருளாதே நீ
சிதையாதே நீ சீறாதே நீ
சிறப்பாக்குவார்... உன்னை... சிங்கார வனமாக்குவார்

உடைந்து கீழே விழுந்தாயோ
மண்ணாகிப் போனாயோ
மனிதர் உன் மேல் நடந்ததினால்
தரிசாகிப்போனாயோ
கையில் எடுப்பார் வடிவம் கொடுப்பார்
உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார்
கலங்காதே நீ திகையாதே நீ
கரையாதே நீ சிதறாதே நீ
சிறப்பாக்குவார்... உன்னை... சிங்கார வனமாக்குவார்

English


Un Arugile Nirpavar - உன் அருகிலே நிற்பவர் | Pas. Jayasekar Un Arugile Nirpavar - உன் அருகிலே நிற்பவர் | Pas. Jayasekar Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.