Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon - Christking - Lyrics

    Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon


    உம் கூடார மறைவில்,
    என்னை ஒளித்து வைத்தீர்,
    உம் உள்ளங்கையில்,
    என்னை வரைந்து வைத்தீர் -(2)

    நன்றி நன்றி ஐயா,
    நீர் செய்த நன்மைகட்காய் -(2)

    1) கடந்து வந்த, பாதைகளில்,
    கடினங்கள் பல தாண்ட, உதவி செய்தீர்;
    கலங்கி நின்ற, காலங்களில்,
    கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்;
    நீரின்றி நான் இல்லையே, (இயேசுவே)
    உம், துணையின்றி நான் இல்லையே -(2)

    நன்றி நன்றி ஐயா,
    நீர் செய்த நன்மைகட்காய் -(2)

    2) எனக்கெதிராய், உருவான ஆயுதங்கள்,
    வாய்க்காதது உம், கிருபையே;
    எனக்கெதிராய், எழும்பின நாவுகள்,
    தளர்ந்ததும் உம், கிருபையே;
    தாயினும் மேலாகவே, என்னை காத்தவரே,
    தந்தையினும் மேலாகவே, என்னை சுமந்தவரே;

    நன்றி நன்றி ஐயா,
    நீர் செய்த நன்மைகட்காய் -(2)

    உம் கூடார மறைவில்
    என்னை ஒளித்து வைத்தீர்
    உம் உள்ளங்கையில்,
    என்னை வரைந்து வைத்தீர் -(2)

    நன்றி நன்றி ஐயா,
    நீர் செய்த நன்மைகட்காய் -(2)
    நீர் செய்த நன்மைகட்காய் -(2)

    English


    Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.