Adaikalmae Adaikalmae / அடைக்கலம் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Adaikalmae Adaikalmae / அடைக்கலம் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics

    அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா உன்
    அடைக்கலம் அடைக்கலமே

    திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு (2)

                                                                                   - அடைக்கலம்
    ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே
    அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே
    மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
    தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்

                                                                                  - அடைக்கலம்
    சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
    நொந்துரு கெதுமனச் சஞ்சல மகற்றிடும்
    பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
    எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே

                                                                                    - அடைக்கலம்
    என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
    என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
    அன்றுனது பக்கத்தில் ஆயிருந்த கள்ளனுக்கு
    இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ

                                                                                     - அடைக்கலம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Adaikalmae Adaikalmae / அடைக்கலம் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics Adaikalmae Adaikalmae / அடைக்கலம் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.