Anbu yesuvin anbu / அன்பு இயேசுவின் அன்பு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anbu yesuvin anbu / அன்பு இயேசுவின் அன்பு - Tamil Christian Songs Lyrics

    அன்பு இயேசுவின் அன்பு - அது
    அளவிடமுடியாதது
    நம்பு நீ அதை நம்பு - இந்த
    இகமதில் கிடைக்காதது

    தந்தை தாய் அன்பொருநாள் - அது
    தணிந்தே போய்விடும் - தன்
    பிள்ளையின் அன்பொருநாள் - அது
    பிரிந்தே போய்விடும்

    என்றென்றும் மாறாதது - என்
    இயேசுவின் தூய அன்பு
    என் வாழ்வில் தீராதது - என்
    தேவனின் ஜீவ அன்பு

    கணவனின் அன்பொருநாள் - அது
    கரைந்தே போய்விடும் - நல்ல
    மனைவியின் அன்பொருநாள் - அது
    மறைந்தே போய்விடும்

    உறவினர் அன்பொருநாள் - அது
    ஒழிந்தே போய்விடும் - உடன்
    பிறந்தவர் அன்பொருநாள் - அது
    அழிந்தே போய்விடும்

    நண்பனின் அன்பொருநாள் - அது
    நழுவியே போய்விடும் - நீ
    நம்பினோர் அன்பொருநாள் - அது
    வழுவியே போய்விடும்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anbu yesuvin anbu / அன்பு இயேசுவின் அன்பு - Tamil Christian Songs Lyrics Anbu yesuvin anbu / அன்பு இயேசுவின் அன்பு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.