Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics
பாடியே துதிமனமே அரனைக் கொண்டு
ஆடித் துதி தினமே பாடியே துதிமனமே
நீடித்தக் காலமதாக பரன் எம்மை - (2)
நேசித்த பட்சத்தில் வாசித்து வாசித்து
- பாடியே
தீர்க்கத்தரிசிகளைக் கொண்டு முன்னோரு
செப்பின தேவபறன் இந்தக்காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு - (2)
விளக்கின அன்பை விறைந்து தியானித்து
- பாடியே
சொந்த ஜனமாக யுதர்; இருந்திட
தொலைவில் கிடந்த புற மாந்தராம் எம்மையும்
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை - (2)
மைந்தர்களாக்கின சந்தோஷத்திற்க்காக
- பாடியே
எத்தனை தீர்க்கரனேக அப்போஸ்தளர்
எத்தனை போதகர்கள் இரத்த சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை
- பாடியே
Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
No comments: