Aa Apra Umparamum / ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aa Apra Umparamum / ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    அனுபல்லவி

    ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்

    சரணங்கள்

    1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
    அச்சய சச்சித - ரட்சகனாகிய
    உச்சிதவரனே! --- ஆ! அம்பர

    2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று
    அல்லிராவினில் - தொல்லையிடையினில்
    புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

    3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
    நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
    இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

    4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
    கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
    கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

    5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
    மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aa Apra Umparamum / ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு - Tamil Christian Songs Lyrics Aa Apra Umparamum / ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.