Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆவியை மழைபோலே யூற்றும், - பல
    ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

    அனுபல்லவி

    பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், --- ஆவியை

    சரணங்கள்

    1. அன்பினால் ஜீவனை விட்டீர்; - ஆவி
    அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
    இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
    ஏராளமான ஜனங்களைச் சேரும். --- ஆவியை

    2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
    தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
    பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு;
    பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். --- ஆவியை

    3. காத்திருந்த பல பேரும் - மனங்
    கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
    தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
    சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். --- ஆவியை

    4. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
    சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
    பாத்திரராக அநேகரெழும்பப்
    பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். --- ஆவியை
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.