Aathuma Aadhayam Seivoma / ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aathuma Aadhayam Seivoma / ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆத்தும ஆதாயம் செய்குவோமே - இது 
    ஆண்டவர்க்குப் பிரியம் - நாமதினால் நாம
    ஆசீர்வாதம் பெறுவோம்

    அனுபல்லவி

     சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
    ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    அற்புதமான பலனை அடையலாம்

    சரணங்கள்

    1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
    பாதித்துக் கொண்டாலும் - ஒரு
    நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
    நஷ்டப்படுத்தி விட்டால்,
    ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
    அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
    ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
    எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே --- ஆத்தும

    2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
    மட்டில்லா தேவசுதன் - வானை
    விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
    விட்டதும் விந்தைதானே;
    துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
    தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
    இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
    இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே --- ஆத்தும
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aathuma Aadhayam Seivoma / ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Tamil Christian Songs Lyrics Aathuma Aadhayam Seivoma / ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.