Aathuma Karthara Thudhikindradha / ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aathuma Karthara Thudhikindradha / ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!

    அனுபல்லவி

    நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே - இதோ! --- ஆத்துமா

    சரணங்கள்

    1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
    அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
    முடிவில்லா மகிமை செய்தாரே , பல
    முடியவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! --- ஆத்துமா

    2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் - நரர்
    பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
    உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
    உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! --- ஆத்துமா

    3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
    முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
    நட்புடன் நினைவொடு நல்லிசரேல் - அவன்
    நலம் பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! --- ஆத்துமா
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aathuma Karthara Thudhikindradha / ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Tamil Christian Songs Lyrics Aathuma Karthara Thudhikindradha / ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.