Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics

    ஆவியை மழைபோலே ஊற்றும் - பல
    ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்

    பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
    பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

    அன்பினால் ஜீவனை விட்டீர்-ஆவி
    அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
    இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
    ஏராளமான ஜனங்களைச் சேரும்-

    சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
    தேடிப் பிடித்து நீர் தூக்கி சுமந்து
    பதறாதே நான் தான் உன் நல் மேய்ப்பன் ஏசு
    பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்

    காத்திருந்த பல பேரும்-மனங்
    கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
    தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
    சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்

    தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
    சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
    பாத்திரராக அநேகரெழும்பப்
    பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.