Alaluya ha Mandhara / அல்லேலூயா ஆ மாந்தரே- Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Alaluya ha Mandhara / அல்லேலூயா ஆ மாந்தரே- Tamil Christian Songs Lyrics


    1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
    இந்நாளில் சாவை வென்றோராம்
    விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
    அல்லேலூயா!

    2. அஞ்ஞாயிறு அதிகாலை
    நல் மாதர் மூவர் கல்லறை
    சென்றாரே காண தேகத்தை.

    3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
    வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
    நாதர் கலிலேயா செல்வார்.

    4. பயந்த சீஷர் ராவிலே
    கண்டார் கேட்டார் தம் நாதரே!
    என் சமாதானம், தாசரே!

    5. உயிர்த்த நாதர் கண்டோமே
    என்றோரைத் தோமா கேட்டானே;
    நம்பான், சந்தேகங்கொண்டானே.

    6. வா, தோமா, என் விலாவைப் பார்,
    இதோ, என் கைகள் கால்கள் பார்;
    நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

    7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
    விலா, கை, கால்கள் நோக்கினன்;
    என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

    8. காணாமல் நம்பின் பாக்கியர்;
    மாறா விஸ்வாசம் வைப்பவர்
    மா நித்திய ஜீவன் பெறுவர்.

    9. மா தூயதாம் இந்நாளில் நாம்
    நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
    பரனைப் போற்றி மகிழ்வோம்.
    அல்லேலூயா!

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Alaluya ha Mandhara / அல்லேலூயா ஆ மாந்தரே- Tamil Christian Songs Lyrics Alaluya ha Mandhara / அல்லேலூயா ஆ மாந்தரே- Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.