Anburuvam Em Andava / அன்புருவாம் எம் ஆண்டவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anburuvam Em Andava / அன்புருவாம் எம் ஆண்டவா - Tamil Christian Songs Lyrics


    1. அன்புருவாம் எம் ஆண்டவா,
    எம் ஜெபம் கேளும், நாயகா;
    நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
    பாங்குடன் கட்ட அருளும்.

    2. வாலிபத்தில் உம் நுகமே
    வாய்மை வலுவாய் ஏற்றுமே,
    வாழ்க்கை நெறியாம் சத்தியம்
    நாட்ட அருள்வீர் நித்தியம்.

    3. அல்லும் பகலும் ஆசையே
    அடக்கி ஆண்டு, உமக்கே;
    படைக்க எம்மைப் பக்தியாய்
    பழுதேயற்ற பலியாய்.

    4. சுய திருப்தி நாடாதே,
    உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
    வேண்டாம் பிறர் பயம் தயை,
    வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

    5. திடனற்றோரைத் தாங்கிட,
    துக்கிப்பவரை ஆற்றிட;
    வாக்கால் மனத்தால் யாரையும்
    வருத்தா பலம் ஈந்திடும்.

    6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
    தீங்கற்ற இன்பம் தேடிட,
    மன்னிக்க முற்றும் தீமையை
    நேசிக்க மனு ஜாதியை.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anburuvam Em Andava / அன்புருவாம் எம் ஆண்டவா - Tamil Christian Songs Lyrics Anburuvam Em Andava / அன்புருவாம் எம் ஆண்டவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.