Anathi devan un Adaykalama / அனாதி தேவன் உன் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anathi devan un Adaykalama / அனாதி தேவன் உன் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics

    அனாதி தேவன் உன் அடைக்கலமே
    அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

    இந்த தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன்
    மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

    காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
    தூய தேவ அன்பே
    இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
    இனிதாய் வருந்தி அழைத்தார்

    கானகப் பாதை காரிருளில்
    தூய தேவ ஒளியே
    அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
    அரும் நீரூற்றாய் மாற்றினாரே

    கிருபை கூர்ந்து மனதுருகும்
    தூய தேவ அன்பே
    உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
    உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்

    வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
    தூய தேவ அருளால்
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

    ஆனந்தம்பாடி திரும்பியே வா
    தூய தேவ பெலத்தால்
    சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
    சத்தம் மகிழ்ச்சி அடைவாய்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anathi devan un Adaykalama / அனாதி தேவன் உன் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics Anathi devan un Adaykalama / அனாதி தேவன் உன் அடைக்கலமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.