Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குறார்

    சரணங்கள்

    1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
    மாயலோகத்தோடழியாதூயான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே --- அந்தோ

    2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே --- அந்தோ

    3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
    கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
    குருதி வடிந்தவர் தொங்கினார்
    வருந்தி மடிவோரை மீட்டிடவே --- அந்தோ

    4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
    அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
    அதை எண்ணியே நிதம் வாழுவேன்
    அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே --- அந்தோ

    5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் --- அந்தோ

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.