Sathiya vedam / சத்திய வேதம் பக்தரின் கீதம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Sathiya vedam / சத்திய வேதம் பக்தரின் கீதம் - Tamil Christian Songs Lyrics


    சத்திய வேதம் பக்தரின் கீதம்
    சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
    உத்தம மார்க்கம் காட்டும்

    எத்தனை துன்பம் துயரம் வந்து
    பக்தனை தேற்றிடும் ஒளஷதம்

    நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
    சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
    இதயம் மகிழும் கண்கள் தெளியும்
    இருண்ட ஆத்துமா உயிரடையும்

    பேதைகளிடம் ஞானம் அருளும்
    தேவ புத்தகம் மேன்மை தரும்
    இரவும் பகலும் இதன் தியானம்
    இனிமை தங்கும் தனிமையிலும்

    வேதப் பிரியர் தேவப் புதல்வர்
    சேதமடையா நடத்திடுவார்
    இலைகள் உதிரா மரங்கள் போல
    இவர்கள் நல்ல கனி தருவார்

    உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
    கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
    கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
    கனமடைய வழி நடத்தும்

    கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
    கன்மலையையும் நொறுக்கிடுமே
    இதய நினைவை வகையாய் அறுக்கும்
    இரு புறமும் கருக்குள்ளதே

    வானம் அகலும் பூமி அழியும்
    வேத வசனம் நிலைத்திருக்கும்
    பரமன் வேதம் எனது செல்லவம்
    பரவசம் நிதம் அருளும்

    saththiya vaetham paktharin geetham
    suththarkal pokum paathaiyin theepam
    uththama maarkkam kaattum

    eththanai thunpam thuyaram vanthu
    pakthanai thaettidum olashatham

    niththam virumpum karththar vasanam
    suththa pasumpon thelinthidum thaen
    ithayam makilum kannkal theliyum
    irunnda aaththumaa uyirataiyum

    paethaikalidam njaanam arulum
    thaeva puththakam maenmai tharum
    iravum pakalum ithan thiyaanam
    inimai thangum thanimaiyilum

    vaethap piriyar thaevap puthalvar
    sethamataiyaa nadaththiduvaar
    ilaikal uthiraa marangal pola
    ivarkal nalla kani tharuvaar

    ullam uthikkum uruthi alikkum
    kallang kapadellaam akattum
    katinthu kollum karaikal pokkum
    kanamataiya vali nadaththum

    karththar vasanam valla sammatti
    kanmalaiyaiyum norukkidumae
    ithaya ninaivai vakaiyaay arukkum
    iru puramum karukkullathae

    vaanam akalum poomi aliyum
    vaetha vasanam nilaiththirukkum
    paraman vaetham enathu sellavam
    paravasam nitham arulum

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Sathiya vedam / சத்திய வேதம் பக்தரின் கீதம் - Tamil Christian Songs Lyrics Sathiya vedam / சத்திய வேதம் பக்தரின் கீதம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 19, 2015 Rating: 5

    3 comments:

    1. Thank you for your effort.....
      We couldn't find full song in sathya vedam.....

      ReplyDelete
    2. Comforting song

      ReplyDelete
    3. When it comes to searching a Tamil song, it becomes tiresome but technology has changed the scenario. Visit tamillyrics143.com

      ReplyDelete

    Powered by Blogger.