Enoodirum Maa Neser Karthara / என்னோடிரும் மா நேச கர்த்தரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Enoodirum Maa Neser Karthara / என்னோடிரும் மா நேச கர்த்தரே - Tamil Christian Songs Lyrics


    1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
    வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
    மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
    நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
    இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
    கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
    மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

    3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
    வராமல், சாந்தம் தயை கிருபை
    நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
    நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

    4. நீர் கூடநின்று அருள் புரியும்;
    பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
    என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
    இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

    5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
    நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
    சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
    நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

    6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
    உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
    விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
    வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
    SongsLyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Enoodirum Maa Neser Karthara / என்னோடிரும் மா நேச கர்த்தரே - Tamil Christian Songs Lyrics Enoodirum Maa Neser Karthara / என்னோடிரும் மா நேச கர்த்தரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.