Osana Palar Paadum / ஓசன்னா பாலர் பாடும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Osana Palar Paadum / ஓசன்னா பாலர் பாடும் - Tamil Christian Songs Lyrics

    ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
    மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

    1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
    தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

    2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
    மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

    3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
    மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

    4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
    உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

    5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
    நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Osana Palar Paadum / ஓசன்னா பாலர் பாடும் - Tamil Christian Songs Lyrics Osana Palar Paadum / ஓசன்னா பாலர் பாடும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.