Kurusinil Thongaiya / குருசினில் தொங்கியே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kurusinil Thongaiya / குருசினில் தொங்கியே - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    குருசினில் தொங்கியே குருதியும் வடிய
    கொல்கதா மலைதனிலே - நம்
    குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
    கொள்ளாய் கண் கொண்டு

    சரணங்கள்

    1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
    சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்
    திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
    சேனைத்திரள் சூழ --- குருசினில்

    2. பாதகர் நடுவில் பாவியினேசன்
    பாதகன் போல் தொங்க - யூத
    பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
    படுத்திய கொடுமைதனை --- குருசினில்

    3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
    சகியாமல், நாணுதையோ! - தேவ
    சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
    துடிக்கா நெஞ்சுண்டோ? -- குருசினில்

    4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
    இறைவன் விலாவதிலே - அவர்
    தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
    திறந்தூறோடுது பார் --- குருசினில்

    5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
    ஏங்கிப் புலம்பலையோ? - நின்
    எருசலையதிபன் இள மணவாளன்
    எடுத்த கோல மிதோ? --- குருசினில்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kurusinil Thongaiya / குருசினில் தொங்கியே - Tamil Christian Songs Lyrics Kurusinil Thongaiya / குருசினில் தொங்கியே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.