Nal Meetpar Patchathil Nillum / நல் மீட்பர் பட்சம் நில்லும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nal Meetpar Patchathil Nillum / நல் மீட்பர் பட்சம் நில்லும் - Tamil Christian Songs Lyrics

    1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
    ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
    சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
    பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

    2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
    போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
    அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
    பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

    3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
    நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
    சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
    எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

    4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
    வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
    மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
    விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nal Meetpar Patchathil Nillum / நல் மீட்பர் பட்சம் நில்லும் - Tamil Christian Songs Lyrics Nal Meetpar Patchathil Nillum / நல் மீட்பர் பட்சம் நில்லும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.