Neer Nallavar Ma Vallavar / நீர் வல்லவர்! மா வல்லவர்! - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer Nallavar Ma Vallavar / நீர் வல்லவர்! மா வல்லவர்! - Tamil Christian Songs Lyrics

    1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை
    உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்;
    விண்மீன்களும் பேரிடி முழக்கமும்
    உம் வல்லமை எடுத்துரைக்குதே.

    என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே!
    நீர் வல்லவர் ! மா வல்லவர் !
    போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா !
    நீர் வல்லவர் ! மா வல்லவர் !

    2. காடுகளின் பசும் மரங்கள் மீது
    கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்;
    உயர் மலை உன்னத காட்சி கண்டேன்,
    தென்றல் காற்றும் தெளிநீரோடையும் --- என்

    3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும்
    மரிக்கவே அனுப்பி வைத்தாரே;
    சிலுவையில் என் பாவ பாரமேற்று
    ரத்தம் சிந்தி பாவ பலியானார் --- என்

    4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு
    என்னைச் சேர்க்க இயேசு வருவாரே
    உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும்
    வல்லவரை வணங்கித் தொழுவேன் --- என்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer Nallavar Ma Vallavar / நீர் வல்லவர்! மா வல்லவர்! - Tamil Christian Songs Lyrics Neer Nallavar Ma Vallavar / நீர் வல்லவர்! மா வல்லவர்! - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.