Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics

    1. நிர்ப்பந்தமான பாவியாய்
    நான் இங்கே தேவரீருக்கே
    முன்பாக மா கலக்கமாய்
    நடுங்கி வந்தேன், கர்த்தரே;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    2. ஆ! என் குரூர பாவத்தால்
    மிகுந்த துக்கம் அடைந்தேன்;
    ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
    நிறைந்த ஏழை அடியேன்,
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
    செய்யாமல் தயவாய் இரும்;
    பிதாவே, என்னைப் பிள்ளையாய்
    இரங்கி நோக்கியருளும்;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    4. என் நெஞ்சின் திகில் தணித்து,
    என்மேல் இரங்கி ரட்சியும்;
    திவ்விய சந்தோஷம் அளித்து
    எப்போதும் கூடவே இரும்;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics Nirbandhama Paaviyai / நிர்பந்தமான பாவியாய் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.