Yen athumavae nee / என் ஆத்துமாவே நீ கர்த்தரை - Tamil Christian Songs Lyrics

    Yen athumavae nee / என் ஆத்துமாவே நீ கர்த்தரை - Tamil Christian Songs Lyrics



        என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
        என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை என்றும் ஸ்தோத்தரி
        என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
        அவர் செய்த சகல உபகாரங்களை என்றும் மறவாதே

        இராஜாதி ராஜாவே என்றுமே
        கர்த்தாதி கர்த்தாவே என்றுமே
        இராஜாதி ராஜாவே என்றுமே
        அல்லேலூயா ஆமேன் - (2)

        உன் அக்ரமங்களை மன்னித்தார்
        உந்தன் நோய்களை குணமாக்கினார் (2)
        உந்தன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார்
        உன்னை கிருபை இரக்கத்தால்முடி சூட்டினாரே
        அவருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் - (2)

                                                                            - இராஜாதி
        உன் வாயை நன்மையினால்
        கர்த்தர் திருப்தி ஆக்குகின்றார் (2)
        உன் வயது கழுகுக்கு சமானமாய்
        திரும்ப வாலவயது போல் ஆகும்
        அவருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் - (2)

                                                                            - இராஜாதி
        அவர் எப்போழுதும் கடிந்து கொள்ளார்
        தேவன் என்றைக்கும் கோபங் கொண்டிரார் (2)
        நம் பாவங்களுக்குத் தக்கதாய் செய்யாமல்
        சரிக்கட்டாமலும் அவர் இருக்கின்றதாலே
        அவருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் - (2)

                                                                             - இராஜாதி

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yen athumavae nee / என் ஆத்துமாவே நீ கர்த்தரை - Tamil Christian Songs Lyrics Yen athumavae nee / என் ஆத்துமாவே நீ கர்த்தரை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.