Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics

    Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics



    எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
    எழில் மாட்சிமை வளர் வாலிபரே
    உங்களை அல்லவோ உண்மை வேதம் காக்கும்
    உயர்வீரரெனப் பக்தர் ஒதுகிறார்

                                                                                      - எங்கும்
    அயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
    அதை அறிந்து துதி செய்குவீர்
    தாயினும் மடங்கு சதம் அன்புடைய
    சாமி யேசுவுக்கியம் தந்திடுவீர்

                                                                                        - எங்கும்
    கல்வி கற்றோர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
    கடன்பட்டவர்; கண்திறக்கவே
    பல்வழி அலையும் பாதைத்தப்பினோரைப்
    பரிந்து திருப்ப நிதம் பாத்திடுவீர்

                                                                                        - எங்கும்
    சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
    சேர வலிபர் நீரே தேவையே
    கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
    கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

                                                                                         - எங்கும்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.