Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics


    1. இயேசுவே, உம்மை தியானித்தால்
    உள்ளம் கனியுமே;
    கண்ணார உம்மைக் காணுங்கால்
    பரமானந்தமே.

    2. மானிட மீட்பர் இயேசுவின்
    சீர் நாமம் போலவே,
    இன் கீத நாதம் ஆய்ந்திடின்
    உண்டோ இப்பாரிலே?

    3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
    நம்பிக்கை ஆகுவீர்;
    நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
    சந்தோஷம் ஈகுவீர்.

    4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
    ஈவீர் எந்நன்மையும்;
    கண்டடைந்தோரின் பாக்கிய சீர்
    யார் சொல்ல முடியும்?

    5. இயேசுவின் அன்பை உணர்ந்து
    மெய் பக்தர் அறிவார்;
    அவ்வன்பின் ஆழம் அளந்து
    மற்றோர் அறிந்திடார்.

    6. இயேசுவே, எங்கள் முக்தியும்
    பேரின்பமும் நீரே;
    இப்போதும் நித்திய காலமும்
    நீர் எங்கள் மாட்சியே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.