Um Anbu Ondru Poodhum Yesappa / உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Um Anbu Ondru Poodhum Yesappa / உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா - Tamil Christian Songs Lyrics



    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
    உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

    நிறைவான மகிழ்ச்சி நீரே
    நித்திய பேரின்பமே

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
    என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
    வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
    உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

    அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
    வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
    உள்ளம் பாரத்தாலே சிதறியதே
    உம் பாசக்கரம் நீட்டினீரே
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    என் விண்ணப்பத்தை கேட்டவரே
    என் கண்ணீரை காண்பவரே
    உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
    எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
    அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
    ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Um Anbu Ondru Poodhum Yesappa / உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா - Tamil Christian Songs Lyrics Um Anbu Ondru Poodhum Yesappa / உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.