Geetam geetam jeya jeya | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - Lyrics - Christking - Lyrics

    Geetam geetam jeya jeya | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - Lyrics



    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
    ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

    பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் - அங்கு
    போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதி முன்

    வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுவோம் -தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு

    அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
    பூதகணங்கள் இடி ஒலி கண்டு
    பயந்து நடுங்குகின்றார்

    வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
    வருகின்றார் ஜெய வீரர் - நம்
    மேளவாத்தியம் கைமணி பூரிகை
    எடுத்து முழுங்கிடுவோம்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Geetam geetam jeya jeya | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - Lyrics Geetam geetam jeya jeya | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.