Maraname un koor enge | மரணமே உன் கூர் எங்கே - Lyrics - Christking - Lyrics

    Maraname un koor enge | மரணமே உன் கூர் எங்கே - Lyrics



    மரணமே உன் கூர் எங்கே
    பாதாளமே உன் ஜெயம் எங்கே
    மரணத்தை ஜெயித்த
    மன்னவன் இயேசு
    எனக்குள் வந்துவிட்டார்
    சாவை அழித்து அழியா வாழ்வை
    எனக்கு தந்து விட்டார்

    சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு
    சாவாலே வென்றுவிட்டார்
    மரண பயத்தினால் வாடும் மனிதரை
    விடுவித்து மீட்டுக் கொண்டார்

    பயமில்லை மரண பயமில்லை
    ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

    அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
    அழியாமை அணிந்து கொள்ளும்
    சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
    சாவாமை அணிந்து கொள்ளும்

    இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
    ஆளுகை செய்திடவே
    இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
    இன்றைக்கும் ஜீவிக்கிறார்

    கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
    கர்த்தர் இயேசு வந்திடுவார்
    கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்
    கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
    எதிர்கொண்டு சென்றிடுவோம்

    பூமிக்குரிய கூடாரமான
    இவ்வீடு அழிந்தாலும்
    பரமன் கட்டிய நிலையான வீடு
    பரலோகத்தில் உண்டு

    அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
    நான் தானே என்று சொன்னவர்
    அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
    சீக்கிரத்தில் வருகின்றார்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Maraname un koor enge | மரணமே உன் கூர் எங்கே - Lyrics Maraname un koor enge | மரணமே உன் கூர் எங்கே - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.