Inba yesuvin inaiyilla | இன்ப இயேசுவின் இணையில்லா - Lyrics - Christking - Lyrics

    Inba yesuvin inaiyilla | இன்ப இயேசுவின் இணையில்லா - Lyrics



    இன்ப இயேசுவின் இணையில்லா
    நாமத்தை புகழ்ந்து
    இகமதில் பாடிட தருணமிதே
    இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
    இன்றும் என்றென்றும் அவர்
    துதி சாற்றிடுவேன்

    நித்தியமான பர்வதமே
    உந்தனில் நிலைத்திருப்பேன்
    நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
    நித்தம் நடத்திகிறீர் - என்னையும்
    உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
    உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

    பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
    ஆழ்ந்து நான் மாள்கையிலே
    பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
    பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
    பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக
    பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

    மானானது நீரோடைகளை
    வாஞ்சித்துக் கதறுமாப் போல் - என்
    ஆத்துமா உம்பொன் முகம் காணவே
    வாஞ்சித்து கதறிடுதே
    வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என்
    வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

    ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
    அன்பரை உளம் கனிந்தே
    அற்புத ஜெயம் ஈந்தீரே
    அளவில்லாத ஜீவனை அளித்தே
    அல்லேலூயா துதி கன மகிமை - உம்
    நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Inba yesuvin inaiyilla | இன்ப இயேசுவின் இணையில்லா - Lyrics Inba yesuvin inaiyilla | இன்ப இயேசுவின் இணையில்லா - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.