Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics - Christking - Lyrics

    Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics



    இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
    இயேசுவுக்கு சொந்தமல்லவா
    ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
    தருகின்ற தேவன் அல்லவா

    பாடி ஸ்தோத்தரிப்பேன்
    சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
    உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

    சாரோனின் ரோஜா நீரே
    சீயோனில் பெரியவரே
    சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
    பாடுவேன் அல்லேலூயா

    காருண்யம் உள்ளவரே
    கரம் பற்றி நடத்திடுமே
    கண்மணிபோல காத்திட்டதாலே
    பாடுவேன் அல்லேலூயா

    சாலோமின் ராஜா நீரே
    சமாதான காரணரே
    ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
    பாடுவேன் அல்லேலூயா

    மரணத்தை வெண்றவரே
    மறைவிடமானவரே
    வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
    பாடுவேன் அல்லேலூயா





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.