Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் - Christking - Lyrics

    Anathi Snehathal – அநாதி சிநேகத்தால்



    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே

    அன்பு பெரியது
    இரக்கம் பெரியது
    கிருபை பெரியது
    தயவு பெரியது

    1. அனாதையாய் அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே – அன்பு

    2. நிலையில்லாதா உலகத்தில்
    அலைந்தேனய்யா
    நிகரில்லாத இயேசுவே
    அனைத்துக் கொண்டீரே – அன்பு

    3. தாயின் கருவில் தொன்றுமுன்னே
    தெரிந்துக் கொண்டீரே
    தாயைப் போல ஆற்றி தேற்றி
    நடத்தி வந்தீரே – அன்பு

    4. நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனைய்யா – அன்பு

    5. கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே – அன்பு




    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் Reviewed by Christchoir on September 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.