Ummil Naan Vazhgiraen - உம்மில் நான் வாழ்கிறேன் - Christking - Lyrics

    Ummil Naan Vazhgiraen - உம்மில் நான் வாழ்கிறேன்


    Ummil Naan Vazhgiraen
    Umakkullae Valargiraen

    1. Jeevathaneeraam Umakkulae
    Vaer Kondu Valarum Maram Naanae
    Padarndhiduvaen Nizhal Tharuvaen
    Paravaigal Thangaum Veedaavaen

    2. Adithalam Rattchagar Yesuvin Mael
    Amaindhu Uyarum Kattadam Naan
    Perungaatru Asaippadhillai
    Perumazhaiyo Pirippadhillai

    3. Yesuvae Yenadhu Thalaiyaaneer
    Naano Umadhu Udalaanaen
    Um Ninaivu Yen Unavu
    Um Viruppam Yen Yeakkam

    4. Chediyaana Ummodu Yinaindhuvittaen
    Kodiyaai Padarndhu Kani Tharuvaen
    Yilaigalaellaam Marundhaagum
    Kanigalellam Virundhaagum

    5. Umadhu Vaarthaigal Yenakkulae
    Undhan Aavi Yennodae
    Meetpalikkum Narumanam Naan
    Kaetppadhaellam Paettrukolvaen
    உம்மில் நான் வாழ்கிறேன்
    உமக்குள்ளே வளர்கிறேன்

    1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
    வேர் கொண்டு வளரும் மரம் நானே
    படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
    பறவைகள் தங்கும் வீடாவேன்

    2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
    அமைந்து உயரும் கட்டடம் நான்
    பெருங்காற்று அசைப்பதில்லை
    பெருமழையோ பிரிப்பதில்லை

    3. இயேசுவே எனது தலையானீர்
    நானோ உமது உடலானேன்
    உம் நினைவு என் உணவு
    உம் விருப்பம் என் ஏக்கம்

    4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
    கொடியாய் படர்ந்து கனி தருவேன்
    இலைகளெல்லாம் மருந்தாகும்
    கனிகளெல்லாம் விருந்தாகும்

    5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
    உந்தன் ஆவி என்னோடே
    மீட்பளிக்கும் நறுமணம் நான்
    கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummil Naan Vazhgiraen - உம்மில் நான் வாழ்கிறேன் Ummil Naan Vazhgiraen - உம்மில் நான் வாழ்கிறேன் Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.