Vaalnaalelaam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து : Lyrics - Christking - Lyrics

    Vaalnaalelaam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து : Lyrics

    Vaalnaalelaam Kalikurnthu

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்
    காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்

    1. புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
    என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
    ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
    மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
    ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
    வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
    கடந்து போன ஓர் நாள் போல (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    Worship Songs Lyrics,
    Vaalnaalelaam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து : Lyrics Vaalnaalelaam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.