Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics - Christking - Lyrics

    Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics

    Vara Vinai Vanthalum

    வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
    வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

    சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
    அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே

    உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
    உறுதி விட்டயராதே, நெறி தவறாதே

    பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
    பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

    தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
    தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

    மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
    மருள விழாதே, நல் அருளை விடாதே

    Worship Songs Lyrics,
    Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.