Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் : Lyrics - Christking - Lyrics

    Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் : Lyrics

    Sthotharipaen Sthotharipaen

    1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
    என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

    2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
    இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
    உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

    4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
    என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
    தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
    கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
    சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

    Worship Songs Lyrics,David
    Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் : Lyrics Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் : Lyrics Reviewed by Christking on May 14, 2016 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.