Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன : Lyrics - Christking - Lyrics

    Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன : Lyrics

    Thanthaiyum Thayum

    தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
    பிள்ளைகள் கூடி வந்தோம்
    எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
    பிள்ளைகள் ஆகி நின்றோம்
    இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
    எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

    எங்களுக்கு தீமை செய்தோர்களை
    மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
    அன்புடன் அரவணைத்தோம்

    அனுதின உணவை எங்களுக்கு என்றும்
    உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
    இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
    எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

    உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
    இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
    எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
    வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
    நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
    வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
    பிள்ளைகள் கூடி வந்தோம்

    Worship Songs Lyrics,David
    Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன : Lyrics Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.