Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் : Lyrics - Christking - Lyrics

    Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் : Lyrics

    Nirantharam Nirantharam

    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
    மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
    இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – நான்
    மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
    நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

    1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
    தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
    தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் – நான்
    சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
    நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

    2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
    பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
    நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் – அதன்
    விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
    நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)

    Worship Songs Lyrics,David
    Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் : Lyrics Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.