Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு : Lyrics - Christking - Lyrics

    Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு : Lyrics

    Paavikku Pugalidam

    பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
    பாரினில் பலியாக மாண்டாரே

    பரிசுத்தரே பாவமானாரே
    பாரமான சிலுவை சுமந்தவரே

    1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
    காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
    கொலை செய்யவே கொண்டு போனாரே
    கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

    2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
    குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
    பரிகாசமும் பசிதாகமும்
    படுகாயமும் அடைந்தாரே – பாவி

    3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
    கிரீடம் முட்களில் பின்னி சூடிட
    இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
    இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

    4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
    உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
    தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
    தளராமல் நம்பி ஓடி வா – பாவி

    Worship Songs Lyrics,David
    Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு : Lyrics Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு : Lyrics Reviewed by Christking on June 09, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.