En Anbera En Inbamea : Lyrics

என் இன்பமே
என் மதுரமே ஸ்தோத்திரம்
என் நேசத்தந்தையே
என் அன்பின் ரட்சகா
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்
1.ஆயிரம் பாடல்களைப் பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
அற்புதங்கள் தியானித்தேன்
அதிசயங்கள் தியானித்தேன்
அன்பரே இன்பமே ஸ்தோத்திரம்
2.ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால் நிறைந்துமே ஸ்தோத்திரம்
அஞ்சிடாமல் வாழ்ந்திட
சத்துருவை ஜெயித்திட
அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்
3.பரிபூரண ஆனந்தமே உம் சமூகம் ஸ்தோத்திரம்
நித்திய பேரின்பமே வலது பக்கம் ஸ்தோத்திரம்
ஆலோசனைத் தந்தீரே
கண்மணி போல காத்தீரே
கேடகமே துருகமே ஸ்தோத்திரம்
4.காலடிகள் வழுவாது காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்
செட்டைகளின் நிழலிலே
என்னை மறைத்துக் கொண்டீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்
5.விழிக்கும்போது உம் சாயலால் திருப்தியாவேன் ஸ்தோத்திரம்
நீதியில் உம் முகத்தை நான் தரிசிப்பேன் ஸ்தோத்திரம்
உன்னதத்தில் உம்முடன்
என்றென்றுமாய் வாழ்ந்திட
தந்தீரே இந்த இன்ப பாக்கியம்
Song : En Anbera En Inbamea
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
En Anbera En Inbamea : Lyrics
Reviewed by Christking
on
September 22, 2016
Rating:
