Aaruthal Adai Maname

    Aaruthal Adai Maname


    Album : | Artist :

    ஆறுதல் அடை மனமே -கிறிஸ்துவுக்குள்
    ஆறுதல் அடை மனமே
    பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
    கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி

    நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக
    நலிவதேன் ஒருக்காலே
    உம்பர் கோன் மேகத்தின் மேலே - தோன்றிடும் போ
    துயிர்த்தெழும்புவ தாலே
    வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும்
    தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து

    ஜீவ நதிகள் ஓடுமே - எருசலேமில்
    திரளாய் ஜனங்கள் கூடுமே
    தேவ துதியைப் பாடுமே - யேசுகிறிஸ்தின்
    ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே
    ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
    ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக

    எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக
    ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்
    கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக்
    கலங்கி அழுவதும் உண்டாம்
    அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்
    நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு

    யேசுவைப் பற்றின பேர்கள் - மரித்தும் உயிர்த்
    தெழுந்து புறப்படுவார்கள்
    மாசற்ற தேவன் அவர்கள் - உடனிருக்க
    மகிமை பெற்றிருப்பார்கள்
    பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில்
    நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ

    Aaruthal Adai Maname Aaruthal Adai Maname Reviewed by Christking on February 27, 2018 Rating: 5
    Powered by Blogger.