Athikalayil Ummai - அதிகாலையிலுமைத் தேடுவேன் - Christking - Lyrics

    Athikalayil Ummai - அதிகாலையிலுமைத் தேடுவேன்

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
    தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
    ஜெப தபத்தாலே
    இதுகாறும் காத்த தந்தை நீரே
    இனிமேலும் காத்தருள் செய்வீரே
    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
    பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

    1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
    எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
    ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
    எனக்கான நீசனே! வான ராசனே!
    இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

    2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
    தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
    விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
    விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
    விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

    3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
    நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
    பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
    புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
    போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை
    Athikalayil Ummai - அதிகாலையிலுமைத் தேடுவேன் Athikalayil Ummai - அதிகாலையிலுமைத் தேடுவேன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.