Balan Koduppeer - பலன் கொடுப்பீர் - Christking - Lyrics

    Balan Koduppeer - பலன் கொடுப்பீர்

    பல்லவி

    பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
    பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

    அனுபல்லவி
    வழியோரமா? நான் கற்பாறையா?
    முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

    1. இறைவனின் வார்த்தை விதையாகும்
    அறியா உள்ளம் வழியோரம்
    பறவைகள் விரைந்தே தின்பது போல்
    பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்

    2. மண்ணிலா பாறை நிலமாகும்
    மனதில் நிறையற்ற மனிதர்களே
    வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
    வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்

    3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
    முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
    இறைவனின் வார்த்தை வளரவில்லை
    இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்

    4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
    குறையில்லா பண்பட்ட நிலமாகும்
    அறுபது முப்பது நூறு என்றே
    அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்
    Balan Koduppeer - பலன் கொடுப்பீர் Balan Koduppeer - பலன் கொடுப்பீர் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.